காலைத்தோறும் கர்த்தரின் கிருபையால்
மகிழ்ந்து பாடுதே என் உள்ளம் - அல்லேலூயா
ஹா... ஹா நேசர் இயேசு என்னுடன்
இன்றும் என்றும் இருப்பதால்
ஒன்றுக்கும் குறைவில்லையே
1
நினைத்தையும், கொழுப்பையும் உண்டது போலே
வறண்ட நிலம் நீரை கண்டது போலே
என் ஆத்துமா தேவனிலே
என்றென்றும் வாழ்ந்து மகிழ்ந்திருக்குமே. -காலைத்தோறும்
2
ஜீவனை பார்க்கிலும் உமது கிருபையும்
ஜீவனுள்ள நாளெல்லாம் உமது நன்மையும்
என் வாழ்விலே தொடர்ந்திடுமே
என் ஆவி உம்மிலே மகிழ்ந்திருக்குமே. -காலைத்தோறும்
3
புள்ளுள்ள இடங்களில் மேய்க்கும் நேசரே
தண்ணீரண்டை நடத்திடும் நல்லநேசரே
குறைவில்லாமல் நடத்திடுமே
சீரும் என்றும் மகிழ்ந்திருக்குமே. -காலைத்தோறும்