அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 508

கதிரவன் தோன்றும் காலையிலே

கதிரவன் தோன்றும் காலையிலே

புதிய கிருபை பொழிந்திடுதே - நல்

துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே.

1

வான சபர்கள் கானக ஜீவன்

வாழ்த்திடவே பரன் மாட்சிமையே

காற்று, பறவை, உற்று நீரோடை

கர்த்தருக்கே கவி பாடுதே.- கதிரவன்

2

காட்டில் கதறி கானக ஓடை

கண்டடையும் வெளி மான்களைப் போல்

தாகம் தீர்க்கும் ஜீவத் தண்ணீராம்

தற்பரன் இயேசுவைத் தேடிடுவேம்.- கதிரவன்

3

கர்த்தர் கிருபை என்றென்றும் ஈங்கை

கர்த்தரே நல்லவர் என்றுரைப்போம்

கேருபீன்கள் மத்தியில் வாழும்

கர்த்தர் இக்காலையில் எழுந்தருள்வார்.- கதிரவன்

4

எந்தன் உடலும் உந்தனைப் போற்றும்

என் கரங்கள் குவிந்தே வணங்கும்

பாக்கியம் நான் கண்டடைந்தேனே

யாக்கோபின் தேவனே என்துணையே.- கதிரவன்

5

காலை விழிப்பே கர்த்தரின் சாயல்

கண்களும் செவியும் காத்திருக்கும்

பாதம் அமர்ந்து வேதமே ருசித்து

கீதங்கள் பாடியே மகிழ்ந்திடுவேன்.- கதிரவன்

6

வானம் பூமி யாவும் படைத்தீர்

வானம் திறந்தே தோன்றிடுவீர்

ஆவல் அடங்க என்னையும் அழைக்க

ஆத்தும நேசரே வந்திடுவீர்.- கதிரவன்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு