அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 474

விளைந்த பலனை அறுப்பாரில்லை

விளைந்த பலனை அறுப்பாரில்லை

விளைவின் நற்பலன் வாடுதே

அறுவடை மிகுதி ஆளோ இல்லை

அந்தோ மனிதர் அழிகின்றாரே

1

அவர் போல் பேசிட நாவு இல்லை

அவர் போல் அலைந்திட கால்கள் இல்லை

எண்ணிலங்கா மாந்தர் சத்தம்

உந்தன் செவியினில் தொனிக்கலையோ.- விளைந்த

2

ஆத்தும இரட்சண்யம் அடையாதவர்

ஆயிரமாயிரம் அழிகிறாரே

திறப்பின் வாசலில் நிற்பவர் யார்?

தினமும் அவர் குரல் கேட்கலையோ.- விளைந்த

3

ஒரு மனம் ஒற்றுமை ஏக சிந்தை

சபைதனில் விளங்கிட செயல்படுவோம்

நிமிர்ந்து நிற்கும் தூண்களைப்போல்

நிலைவரமாய் என்றும் தாங்கி நிற்பாய்.- விளைந்த

4

ஆத்தும தரிசனம் கண்டிடுவாம்

ஆண்டவர் வாக்கினை ஏற்றிடுவாய்

விரைந்து சென்று சேவை செய்வாய்

விளைவின் பலனை அறுத்திடுவாய்.- விளைந்த

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு