1
நியாயத்தீர்ப்பில், உமதண்டை
நிற்கும் போது, ரட்சகா
உதவாமல், பலனற்று,
வெட்கப்பட்டுப் போவேனா?
2
ஆத்மா ஒன்றும் ரட்சிக்காமல்
வெட்கத்தோடே, ஆண்டவா
வெறுங்கையனாக, உம்மைத்
கண்டுகொள்ளால் ஆகுமா?
3
ஆத்மாக்கள் பேரில் வாஞ்சை
வைத்திராமல் சோம்பலாய்
காலம் கழித்தோர் அந்நாளில்
துக்கிப்பார் நிற்பந்தராம்.
-ஆத்மா ஒன்றும்
4
தேவர் கைதாங்க, சற்றும்
சாவுக்கஞ்சிக் கலங்கேன் ;
ஆயினும், நான் பலன் காண
உழைக்காமற் போயினேன்!
-ஆத்மா ஒன்றும்
5
பக்தரே! உற்சாகத்தோடு
எழும்பியே பிரகாசிப்பீர்!
ஆத்மாக்கள் ஏசுவண்டை
வந்துசேர உழைப்பீர்!
-ஆத்மா ஒன்றும்