அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 45

பிதா, குமாரன், பரிசுத்த

பல்லவி

பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவராம்

திரித்துவ தேவனை துதித்திடுவோம்.

1

நித்தியத்தின் மகிமை பிரகாசத்தில்

சேரக் கூடாத ஒளியினில்

மூன்றொன்றாக ஜொலித்திடும்

பரம பிதாவை ஸ்தோத்தரிப்போம்.

— பிதா

2

பாவத்தின் கோர பலியாக

சாபத்தை தம்மில் ஏற்றுக்கொண்டு

பாவிகளுக்காய் ஜீவனை தந்த

உயிர்த்த குமாரனை ஸ்தோத்தரிப்போம்.

— பிதா

3

வல்லமையோடு வந்திறங்கி

வரங்கள் பலவும் நமக்கு அளிந்து

ஆவியின் வழியை தினம் காட்டும்

பரிசுத்த ஆவியை ஸ்தோத்தரிப்போம்.

— பிதா

4

அனல் போல் சோதனை வந்தாலும்

அக்கினி ஊடாய் நடந்தாலும்

வேதனை நம்மை சூழ்ந்தாலும்

ஜெயம் அளிப்பவரை ஸ்தோத்தரிப்போம்.

— பிதா

5

வானவர் விரைவில் வந்திடுவார்

வாரும் என்றே நாம் அழைப்போமே

வானில் அவருடன் சேர்ந்திடும் நாள்

விரைவில் நெருங்கிட ஸ்தோத்தரிப்போம்.

— பிதா

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு