அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 433

ஓ! இயேசு உமதன்பு

ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியது

ஆகாயம் பூமி மலை ஆழிகளுக்கெல்லாம் பெரியது.

1

ஆவியில்லா ஆனந்தத்தால் அகம் நிறைந்தது

ஆண்டவர் காரியங்கள் அதிகம் சிறந்தது

அன்றாடம் காலை மாலையிலும் துதிக்க உயர்ந்தது

துதிக்க உயர்ந்தது.- ஓ! இயேசு

2

சங்கட சமயங்களில் மங்கியே வாடுகிறேன்

தூங்கனே இரங்குமென ஏங்கியே நாடுகிறேன்

பங்கமில்லாமல் பதிலளிப்பேன் என்றால் பாடுகிறேன்

என்றால் பாடுகிறேன்.- ஓ! இயேசு

3

இருளாம் பள்ளத்தாக்கில் மருகியே நடந்தாலும்

அருமைந் தன்மேய்ப்பராய் அருகிலிருப்பதாலும்

கருணையா வென்னைனைக் கரம் பிடித்தே

காத்திடே காப்பதாலும் காத்தரே காப்பதாலுமே.- ஓ! இயேசு

4

குறைவுள்ளோனானாலும் கூடவே இருக்கிறீர்

நிறைவாசம் புல் தரைகளில் மெதுவாக நடத்துகிறீர்

இறைவனாம் யேசு எல்லாவற்றிலும்

திருப்தியாக்குகிறீர், திருப்தியாக்குகிறீர்.- ஓ! இயேசு

5

தேவனுடைய வீட்டில் சித்தப்படி துதிப்பேன்

ஏக இதயத்துடனே என்றுமதை மதிப்பேன்

ஆராத்திக் அருகராம் யேசு அல்லேலூயா ஆமென்

அல்லேலூயா ஆமென்.- ஓ! இயேசு

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு