அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 185

இயேசு நேசிக்கிறார்

இயேசு நேசிக்கிறார், இயேசு நேசிக்கிறார்

இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த

தென்னா மா தவமோ!

1

நீசனா மெனைத்தான் இயேசு நேசிக்கிறார்

மாசில்லாத பரன் சுதன்றன் முழு

மனதால் நேசிக்கிறார்.

— இயேசு

2

பரம தந்தை தந்த பரிசுத்த வேதம்

நரரா மீனரை நேசிக்கிறாரென

நவிலல் ஆச்சரியம்.

— இயேசு

3

நாதனை மறந்து நாட்கழித்துலைந்தும்

நீசன் இயேசனை நேசிக்கிறாரென்றால்

நித்தம் ஆச்சரியமே

— இயேசு

4

ராசன் இயேசுவின் மேல் இன்ப கீதஞ்சொலில்

ஈசன்இயே சனைத்தானே சித்தாரென்ற

இணையில் கீதஞ் சொல்வேன்.

— இயேசு

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு