கிறிஸ்தவ பாடல்

யோபு போல் புடமிடப்பட்டாயோ

yobu poel pudamidapattaayoe

LYRICS: (TAMIL)

யோபு போல்… Gmin || 103 || 4/4

யோபு போல் புடமிடப்பட்டாயோ

இன்னல்கள் அவமானங்கள் சூழ்ந்ததோ

உயிரோடிருக்கும் கர்த்தர் காண்கிறார் – உன்

சிறையிருப்பை மாற்றுவார் – மகிழ்

நிறைவாழ்வைத் தந்திடுவார் -2

1. வெறும் கையனாய் நீ மாறிப் போனாலும் – நாள்

தோறும் உந்தன் கர்த்தரைத் துதி – (2)

ஒரு போதும் நம்பிக்கை விடாமல் -2 அவர்

பொற்பாதம் பற்றிக்கொண்டால் போதும் -2

பாதம் ஒன்றே வேண்டும் -இந்த

பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் -உம்

பாதம் ஒன்றே வேண்டும்

2. தோல் முதலானவை அழுகிப்போனாலும் – உன்

சொந்த பந்தங்கள் விலகினாலும் – (2) நீ

கர்த்தரையே நிந்திக்காமலே -(2) உன்

நித்திரையிலும் அவரைப் பாடு -(2)

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே

எனக்கென்ன குறையுண்டு நீ

சொல்மனமே… (2)

யோபு போல் புடமிடப்பட்டாலும்

இன்னல்கள் அவமானங்கள் சூழ்ந்தாலும்

உயிரோடிருக்கும் கர்த்தர் காண்கிறார் – உன்

சிறையிருப்பை மாற்றுவார் – மகிழ்

நிறைவாழ்வைத் தந்திடுவார் -2

இரட்டிப்பான நன்மை இன்றே வரும் – 8

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு