கிறிஸ்தவ பாடல்

இயேசு பாவி நேசர்தாம்

yesuvae paavi neasar thaam

1.இயேசு பாவி நேசர்தாம்,

வழிதப்பிப்போன யாரும்

அவரால் திரும்பலாம்,

அவரால் எக்கேடும் மாறும்.

அவரால் ரட்சிப்புண்டாம்;

இயேசு பாவி நேசர்தாம்.

2.நாம் மகா அபாத்திர்ர்,

அவர் கிருபை புரிந்தோர்,

ரட்சிப்போம் என்றாண்டவர்

சத்தியமிட்டே மொழிந்தார்

அவர் கிருபாசம்;

இயேசு பாவி நேசர்தாம்.

3.மந்தையில் காணாதது

மேய்ப்பன் கவையால் திரும்பும்

பாவத்தில் விழுந்தது

அவர் கையினால் எழும்பும்

கெட்டுப்போக மாட்டோம் நாம்;

இயேசு பாவி நேசர்தாம்.

4.அழும் பாவகிளையே

தம்மண்டைக் கழைக்கிறாரே,

வரும் பாவியைத் தாமே

தேவப் பிள்ளையாக்குவாரே;

அதை நம்பி வரலாம்.

இயேசு பாவி நேசர்தாம்.

5.துக்கப்பட்டென் பாவத்தை

அறிவிக்க இங்கே வந்தேன்,

மீட்பரே, நீர் கிருபை

செய்யும் அப்போமீட்பைக்கண்டேன்,

போயிற்றென் வியாகுலம்;

இயேசு பாவி நேசர்தாம்,

6.பாவம் சிவப்பாகிலும்

பஞ்சைப் போலாம், எக்கறையும்

அவர் ரத்தம் கழுவும்;

நீதியின் வெள்ளங்கியையும்

ஈவார், அது நிச்சயம்;

இயேசு பாவி நேசர்தாம்.

7.மனச்சாட்சி குத்தினால்

பருவம் தீர்ந்ததென்று சொல்வார்.

மோசே குற்றஞ் சாட்டினால்

அவர் பிணை நின்றுகொள்வார்.

நீங்கிற்றாக்கினை எல்லாம்;

இயேசு பாவி நேசர்தாம்.

8.இயேசு பாவி நேசர்தாம்,

அவர் என்னையும் நேசித்தார்,

நானும் வந்து சேரலாம்,

எனக்கும் மன்னிப்பளித்தார்,

சாவிப்போ தாதாயமாம்;

இயேசு பாவி நேசர்தாம்.

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு