கிறிஸ்தவ பாடல்

வேதபுத்தகமே வேத புத்தகமே

vaethapuththakamae, Vaetha Puththakamae

வேதபுத்தகமே, வேத புத்தகமே,

வேத புத்தகமே, விலை பெற்ற

செல்வம் நீயே

1. பேதைகளின் ஞானமே, – பெரிய

திரவியமே, பாதைக்கு நல்தீபமே -

பாக்யர் விரும்புந் தேனே!

2. என்னை எனக்குக் காட்டி- என்

நிலைமையை மாற்றிப்,

பொன்னுலகத்தைக் காட்டிப்

- போகும் வழி சொல்வாயே!

3. துன்பகாலம் ஆறுதல் – உன்னால்

வரும் நிசமே இன்பமாகுஞ்

சாவென்றாய் – என்றும்

நம்பின பேர்க்கே!

4. பன்னிரு மாதங்களும் -

பறித்துண்ணலாம் உன்கனி

உன்னைத் தியானிப்பவர் -

உயர்கதி சேர்ந்திடுவார்!

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு