வேதனையின் பாதைகளில்
செல்லும்போது காத்துக்கொண்டீர்
அழுகையின் நாட்கள் போதும் என் தேவா
கை பிடித்து நடத்திடுங்க
இயேசுவே இயேசுவே இயேசுவே
என்னைத் தாங்கீடுங்க
ஊழியப்பாதையில் எத்தனை துன்பம்
ஏன் இந்த வேதனை எனக்கு
அப்பா நம்பின நண்பன் கைவிட்டாலும்
கைவிடா நேசர் தாங்கிடுங்க
காரிருள் நேரம் கலங்கிடாதே.
அழைத்தவர் உண்மை உள்ளவர்
அபிஷேகம் தந்து தாங்கிடுவார்.
வெற்றிக் கொடியை பிடிக்கச் செய்வார்