கிறிஸ்தவ பாடல்

வாழ்க வாழ்க வளமுடன்

vazhga vazhga vazhamudan

வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க

வாழ்க இயேசுவின் வாழ்கவே

கையின் பிரயாசங்கள் வாய்க்கவே

களஞ்சியம் நிரம்பி வழியவே

குடும்பம் பிள்ளைகள் செழிக்கவே

இயேசுவில் என்றென்றும் வாழ்கவே

கூடையும் மா பிசையும் தொட்டியும்

கையிடும் வேலையும் வாழ்கவே

போக்கிலும் வரத்திலும் மேன்மையே

இயேசுவில் என்றென்றும் வாழ்கவே

பொழிந்திடும் மழையும் காலத்தில்

விளைந்திடும் நிலமும் வேளையில்

ஜெபத்துடன் முயற்சியும் ஓங்கவே

இயேசுவில் என்றென்றும் வாழ்கவே

வீட்டோரம் திராட்சை செடி போல

மனைவியும் கனி தந்து விளங்குவாள்

பிள்ளைகள் ஒலிவக் கன்று போல்

இயேசுவில் என்றென்றும் வாழ்கவே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு