கிறிஸ்தவ பாடல்

வரம் கேட்டு வருகின்றேன் இறைவா என்

varam kaettu varugintren iraiva

வரம் கேட்டு வருகின்றேன் இறைவா – என்

குரல் கேட்டு அருளாயோ தலைவா – 2

பகைசூழும் இதயத்துச் சுவரை எல்லாம் – என்

பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கின்றேன் – 2

புகை சூழ்ந்து இருள் வாழும் மனதில் எல்லாம் – 2 – உன்

பெயர் சொல்லி ஒளியேற்ற உனைக் கேட்கின்றேன்

நலமெல்லாம் எனக்கென்று தேடும் குணம் – இனி

நாள்தோறும் இறக்கின்ற வரம் கேட்கின்றேன் – 2

பலியாகப் பிறர்க்கென்னை அளித்திட்ட பின் – 2 – என்

பரிசாக உனைக் கேட்கும் வரம் கேட்கின்றேன்

எளியோர் தம் விழி பேசும் துயரமெல்லாம் – என்

இதயத்தைப் பிளக்கட்டும் எனக் கேட்கின்றேன் – 2

ஒளியில்லா இல்லங்கள் இதயங்களில் – 2 – நல்

ஒளியேற்றும் விளக்காக வரம் கேட்கின்றேன்

நம்பிக்கை இழந்தோரெம் முகம் பார்த்த பின் – நல்

நம்பிக்கைப் பெற வேண்டும் எனக் கேட்கின்றேன் – 2

அன்பிற்காய் நான் வாழும் விதம் பார்த்த பின் – 2 – உன்

அன்பெண்ணி வர வேண்டும் உனைக் கேட்கின்றேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு