கிறிஸ்தவ பாடல்

உந்தன் ஆவியை சுவாமி என்றன் மீதினில்

unthan aaviyai swami enthan meethinil

உந்தன் ஆவியை , சுவாமி, என்றன் மீதினில்

வந்து சேரவே , அருள் தந்து காவுமே .

சரணங்கள்

1.இந்த மானிடர் வினை தந்த சாபமும்

நிந்தை யாவுமே பட வந்த ஏசுவே . – உந்தன்

2.சத்தியா ஆவியைச் சீடர்க் கித்தரை விட

சித்தமாய் உரை புரி நித்ய தேவனே . – உந்தன்

3.பெந்தே கோஸ் தெனும் மா சிறந்த நாளிலே

விந்தை ஆவியின் அருள் தந்த நேர்மையே , – உந்தன்

4.மதி மயக்குதே ; பேயும் மன தியக்குதே ,

அதிகமாய் கடல் அலை அறைந்து பாயுதே ;- உந்தன்

5.தாசன் யானுமே புகழ் வீசும் வாய்மையே

வாசமாகவே அருள் , நேச தேவனே ,-உந்த

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு