கிறிஸ்தவ பாடல்

உமக்குத்தான் உமக்குத்தான்

umakkuthaan

உமக்குத்தான் உமக்குத்தான்

ஏசைய்யா என் உடல் உமக்குத்தான்

1. ஒப்புக்கொடுத்தேன் என் உடலை

பரிசுத்த பலியாக (2)

உமக்குகந்த தூய்மையான

ஜீவ பலியாய் தருகின்டேன் (2)

பரிசுத்தரே பரிசுத்தரே(2) - உமக்குத்தான்

2. கண்கள் இச்சை உடல் ஆசைகள்

எல்லாமே ஒழிந்து போகும் (2)

உமது சித்தம் செய்வதுதான்

என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் (2)

பரிசுத்தரே பரிசுத்தரே (2) - உமக்குத்தான்

3. உலக போக்கில் நடப்பதில்லை

ஒத்தவேஷம் தரிப்பதில்லை (2)

தீட்டானதை தொடுவதில்லை

தீங்குசெய்ய நினைப்பதில்லை (2)

பரிசுத்தரே பரிசுத்தரே(2) - உமக்குத்தான்

உமக்குத்தான் உமக்குத்தான்

ஏசைய்யா என் உடல் உமக்குத்தான்

நானும் என் பிள்ளைகளும் உமக்கு தான்

நானும் என் குடும்பமும் உமக்கு தான்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு