கிறிஸ்தவ பாடல்

துதி உமக்கே இயேசு நாதா

thuthi Umakkae Yesu Naathaa

துதி உமக்கே இயேசு நாதா

வாழ்த்திடுவோம் உம்மையே

நித்தமும் காக்கும் உம் கிருபைகளையே

எண்ணியே துதித்திடுவோம்

1. ஆதி அந்தமில்லா அனாதி தேவனே

அடைக்க்கலாமாநீர் எமக்கு நீரே

மாறா விஸ்வாசத்தை எமக்குத் தந்தீரே

எண்ணியே துதித்திடுவோம் – துதி

2. கடந்த நாளெல்லாம் வழுவாமல்

காருண்யத்தாலே காத்தீரே

வல்ல தேவனே உம் வாக்குகளையே

எண்ணியே துதித்திடுவோம் – துதி

3. தாயினும் மேலாய் அன்புகூர்ந்தீர்

தந்தை போல் எமை சுமந்தீரே

ஜீவனைத் தந்த உம் அன்பினையே

எண்ணியே துதித்திடுவோம் – துதி

4. ஜெயம் பெற்றோராய் சேவை செய்து

ஜீவனை வைத்தே துதித்திடவே

நித்திய ஜீவனை எமக்குத் தந்தீரே

எண்ணியே துதித்திடுவோம் – துதி

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு