கிறிஸ்தவ பாடல்

தேவனுக்கே மகிமை

Thaevanukkae Makimai

தேவனுக்கே மகிமை

தெய்வத்திற்கே மகிமை

தேடி வந்து மீட்டவரே

தினம் உமக்கே மகிமை – என்னை

ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க‌

1. உன்னதத்தில் தேவனுக்கே

மகிமை உண்டாகட்டும் – இந்தப்

பூமியிலே சமாதானமும்

பிரியமும் உண்டாகட்டும் — ஐயா

2. செவிகளை நீர் திறந்து விட்டீர்

செய்வோம் உம் சித்தம் – இந்தப்

புவிதனிலே உம் விருப்பம்

பூரணமாகட்டுமே — ஐயா

3. எளிமையான எங்களையே

என்றும் நினைப்பவரே – எங்கள்

ஒளிமயமே துணையாளரே

உள்ளாத்தின் ஆறுதலே — ஐயா

4. தேடுகிற அனைவருமே

மகிழ்ந்து களிகூரட்டும் – இன்று

பாடுகிற யாவருமே

பரிசுத்தம் ஆகட்டுமே — ஐயா

5. குறை நீக்கும் வல்லவரே

கோடி ஸ்தோத்திரமே – பாவக்

கறை போக்கும் கர்த்தாவே

கல்வாரி நாயகனே — ஐயா

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு