கிறிஸ்தவ பாடல்

தாய் மடியில் தவழுகின்ற

thaay Matiyil Thavalukinta

தாய் மடியில் தவழுகின்ற

குழந்தையைப் போல‌

தகப்பனே உம்மடியில்

சாய்ந்துவிட்டேன் நான்

1. கவலையில்லையே கலக்கம் இல்லையே-2

கர்த்தர் கரம் பிடித்துக் கொண்டேன் (நான்)-2

எதைக் குறித்தும் பயமில்லையே-2

என் நேசர் நடத்துகிறீர் (தினம்)-2

2. செய்த நன்மைகள் நினைக்கின்றேன்-2

நன்றியோடு துதிக்கிறேன் (நான்)-2

கைவிடாத என் ஆயனே (என்னை)-2

கல்வாரி நாயாகனே-2

3. துணையாளரே துணையானீரே -2

இணையில்லா மணவாளரே (என்)-2

உணவாக வந்தீரையா-2

உயிரோடு கலந்தீரையா (என்)-2

4. உம்மைத் தானே பற்றிக் கொண்டேன்-2

உம் தோளில் அமர்ந்துவிட்டேன் (நான்)-2

உந்தன் சிறகுகள் நிழ்ல்தனிலே-2

உலகத்தையே மறந்துவிட்டேன் (இந்த)-2

5. அதிகாலமே தேடுகிறேன்-2

ஆர்வமுடன் நாடுகிறேன் (நான்)-2

உயிர்வாழும் நாட்களெல்லாம்-2

உம் நாமம் சொல்வேனையா (நான்)-2

6. படுக்கையிலும் நினைக்கின்றேன்-2

இராச்சாமம் தியானிக்கின்றேன்-2

உம் அன்பு போதுமையா-2

உயிரினும் உயர்ந்தையா-அது-2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு