கேள்! ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே;
அவர் பாவ நாசகர்,
சமாதான காரணர்,
மண்ணோர் யாரும் எழுந்து
விண்ணோர்போல் கெம்பீரித்து
பெத்லெகேமில் கூடுங்கள்,
ஜென்ம செய்தி கூறுங்கள்.
கேள்! ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே.
ஆ அல்லேலூயா துதி பாடு
அன்று அமலன் பிறந்தார் பாடு
மோட்ச வாசலை திறந்தார் பாடு
எந்நாளும் புகழ் பாடு
என் மீட்பர் கிறிஸ்து பிறந்தார்
எனக்கென்ன ஆனந்தம்
என் மீட்பர் கிறிஸ்து உதித்தார்
எனக்கென்ன பேரின்பம்
ஆசீர்வாதமே! கன தேசார் நீதமே (2)
ஒளிர் காசினி மீததி நேசப்பிரகாச
விண் வாச கிருபாசன ஜெய! ஜெய!
மாசில்லாத் தேவ புத்திரன்,
மானிடனானார் ஜெய! ஜெய! (2)
மாசில்லாத் தேவ புத்திரன்,
மானிடனானாரே ஜெய! ஜெய!
மெய்யாகவே மேசியாவுமே,
நம்மை நாடினாரே, கிருபை கூறினாரே
சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம் இவர் தாம் இவர் தாம்
புதுமை பாலன் திரு மனுவேலன்
வறுமை கோலம் எடுத்தவதரித்தார்
முன்னுரைப்படியே முன்னணை மீதே
மன்னுயிர் மீட்கவே பிறந்தாரே
ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி
ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்
ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு
சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்
பக்தரே வாரும் ஆசை ஆவலோடும்
நீர் பாரும், நீர் பாரும் இப்பாலனை
வானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே!
சாஷ்டாங்கம் செய்ய வாரும், இயேசுவை.