கிறிஸ்தவ பாடல்

சுமை சுமந்து சோர்ந்திருப்போரே

sumai sumanthu sornthirupporae

சுமை சுமந்து சோர்ந்திருப்போரே

வாருங்கள் நம் ஆண்டவர் அழைக்கின்றார்

இளைப்பாற்றி கொடுக்கின்றார்

இருகரம் விரித்தவராய் இதயத்தைத் திறந்தவராய் – 2

இறைவன் இருக்கின்றார் இனியும் தாமதமேன்

வரும் வழி பார்த்தவராய் வரம் மழை பொழிந்தவராய் – 2

வந்தவர் இருக்கின்றார் விரைந்திடத் தாமதமேன்

துயரினில் ஆறுதலாய் நோயினில் மருத்துவராய் – 2

அடிமையின் விடுதலையாய் ஆண்டவர் இருக்கின்றார்

வறுமையின் விருந்தெனவே வெறுமையில் மகிழ்வெனவே

வேந்தன் இருக்கின்றார் வந்திடத் தாமதமேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு