கிறிஸ்தவ பாடல்

ஸ்தோத்திரம் இயேசு தேவா

sthothiram yaesu theva

ஸ்தோத்திரம் இயேசு தேவா

ஸ்தோத்திரமே நாதா ஆ! ஆ!!

ஸ்தோத்திரம் தேவா

சரணங்கள்

1. அன்புடன் அருளும் ஆழ்ந்த கிருபையும்

என் போல் ஈனருக்காமோ – ஆ!

உன் போல் ஒருவரையும் உலகெங்கும் காணேன்

தன் உயிர் தந்த தயாளா – ஆ! ஆ!!

2. மீட்பின் செயலால் மீண்டும் பிறக்கா

ஆட்கொண்ட அருள் நிறை வேதா

காட்டினீர் கருணை கல்வாரி தனிலே

நாட்டினீர் என்னில் உம் அன்பை – ஆ! ஆ!!

3. துன்மார்க்கம் நிறை துரோகியாம் என்னை நீர்

நல் மார்க்கம் தன்னில் சேர்த்தீர்

என் மார்க்கம் இனி இல்லையே ஏதும்

உம் மார்க்கம் ஒன்றே போதும் – ஆ! ஆ!!

4. இருள்தனை நீக்கி இருதயத்தில் இருந்ததாம்

மருள்தனை மாற்றிய மன்னா

அருள் ஒளி வீச அகம் வந்த ராஜா

திருவழி திறந்த தியாகா – ஆ! ஆ!!

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு