கிறிஸ்தவ பாடல்

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

sthoththiram Sthoththiramae

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

இயேசு ஸ்வாமிக்கு ஸ்தோத்திரமே

தோஷி என்னை இரட்சித்த

பரிசுத்தர்க்கு ஸ்தோத்திரமே

2. கோடா கோடி தூதர்கள்

சபை கூடி நடனமாடி

பாடி உம்மைத் துதிக்க- அடியானும்

உம்மைத் துதிப்பேன்

3. கன்னியர் கீதம்பாடி இயேசு

மன்னவனையே போற்றி

உன்னி யும்மைத் துதிக்க- அடியானும்

உம்மைத் துதிப்பேன்

4. பரிசுத்தவான்கள் சங்கம்

எங்கள் பார்த்திபன்

இயேசுவையே பாடி உம்மைத் துதிக்க – அடியானும்

உம்மைத் துதிப்பேன்

5. மூப்பர்கள் சுற்றி நின்று

எங்கள் முன்னவன் இயேசுவையே

ஆர்ப்பரித்து துதிக்க – அடியானும்

உம்மைத் துதிப்பேன்

6. பூமியின் தாவரங்கள்

புஷ்பம் பூத்துத் துளிர் மலர்ந்து

நாதா உம்மைத் துதிக்க – அடியானும்

உம்மைத் துதிப்பேன்

7. தாழ்த்தித் தலைகுனிந்து – ரத்த

சாட்சிகள் கூட்டமெல்லாம்

வாழ்த்தி உம்மைத் துதிக்க – அடியானும்

உம்மைத் துதிப்பேன்

8. ஆயிரம் நாவிருந்தால் – அன்பரைப்

பாடியே ஸ்தோத்தரிப்பேன்

ஆவியில் நான் நிறைந்து – எந்தன்

அண்ணலிடம் சொல்லுவேன்

9. கேரூபின் சேராபீன்கள் – உடல்

செட்டைகளால் மூடி

நேராய் உம்மைத் துதிக்க – நீசன்

யானும் உம்மைத் துதிப்பேன்

10. வானத்தின் ஜோதி எல்லாம்

தேவ மைந்தனையே போற்றி

ஞாலத்திலே துதிக்கப்

பாவியானும் உம்மைத் துதிப்பேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு