கிறிஸ்தவ பாடல்

சிந்தை செய்யும் எனில்

sinthai seium enil

சிந்தை செய்யும் எனில் நிரம்புவீர் தேவாவி உமைச்

சிந்தை செய்யும் எனில் நிரம்புவீர்

தந்தைப் பரனாரினின்றும் மைந்தனார் கிறிஸ்தினின்றும்

விந்தையாய்ப் புறப்பட்டேகும் வித்தகத்தின் ஆவியேநீர் – சிந்தை

1.பாலனாய்ப் பரமதந்தைக்கும் அவரின்நேய

சீலனாம் கிறிஸ்தியேசுக்கும்

சாலவே என்றென்னைச் செர்த்திட்டீர் அத்தாலே தேவ

கோலம் என்றன் பங்கதாயிற்று.

தந்தைதாயர் தந்த வாக்கைச் சொந்தவாயால் நான் கொடுக்க

வந்திருக்கும் வேளைதனில் தந்தைசுதன் ஆவியே நீர் – சிந்தை

2.திரியேகதேவனே என்றெ அவரைவிட்டுப்

பிரியேன் என் பிராணன்போனாலும்

அரிய அவரின்தயையே எனக்கு என்றும்

உரிய ஒன்றான பொருளே.

பொய் லோகம் மாம்சம் என்னைப் பிடித்திழுத்தாலும்

ஓய் பரிசுத்த ஆவி உதவுவீர் எனக்கென்றும் ; – சிந்தை

3.பக்தியுள்ள ஜீவியம் செய்து பகலின் சேயாய்

எத்திசையினும் விளங்கிடச்

சுத்தமனம் செய்கையைத்தாரும் எனைநான் என்றும்

தத்தம்செய்யக் கற்பித்தருளும்

உன்னதத்தில் வாழ் தந்தைக்கும் உயர்சுதன் ஆவியர்க்கும்

என்னகத்தினின்றும் துதிஏறுவதாக ஆமென்; – சிந்தை

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு