செல்லுவோம் வாரீர் – selluvom vareer
செல்லுவோம் வாரீர்! சிலுவையடியில்
1.சொல்லரிய நாதன் – சுய சோரி சிந்தி
அல்லற்படுகின்ற – ஆகலத்தைப் பார்க்க – செல்
2.ஒண்முடி மன்னனார் -முண்முடிதரித்து
கண்மயங்கித் தொங்கும் - காட்சியைப் பார்க்க – செல்
3.மூங்கில் தடியாலே - ஓங்கியே அடிக்க
ஏங்கியே தவித்த - இயேசையனைப் பார்க்க - செல்
4.சத்துருவின் கையில் - உற்ற ஆட்டை மீட்க
மெத்தப் பாடுபட்ட - நல்மேய்ப்பனைக் காண – செல்
5.கிருபாசனத்தில்- குருதியோடு சென்ற
அருமைப் பிரதான - ஆசாரியனைப் பார்க்க – செல்
6.பாவவினைபோக - தேவ தயவாக
ஜீவ பலியான – இயேசையனைப் பார்க்க – செல்
7.நித்திய சாவின் கூரை – பக்தி தேகத்தேற்று
வெற்றிபெற்ற இயேசு – மேசியாவைப் பார்க்க – செல்
8.கடனாளிகட்குப் – பிணையாளியாக
உடலுயி ரீந்த - உன்னதனைப் பார்க்க – செல்
9.பிடித்து உதைத்து – இடித்து வதைத்து
அடிக்கப்படும் நல் – ஆட்டுக்குட்டியைப் பார்க்க – செல்