இயேசுவுக்காய் மீன்பிடிக்க அலைபாயும் கடல்மேலே
மிதந்து செல்லும் எங்கள் படகு - 2
ஏலேலோ ஐலஸா . . . 2 தையர் . . . தையா . . .
ஊழியக்காரன் என்பவன் போர்வீரன் போன்றவன்
நன்மை செய்து தீங்கனுபவி என்ற கொள்கையுடையவன் - 2
மனைவி பிள்ளைகள் வீட்டையும் கர்த்தருக்காக இழப்பவன்
பாடு என்ற சிலுவையை தன் தோள்மீது சுமப்பவன்
தேசத்திற்காய் திறப்பில் நின்று தவறாமல் ஜெபிப்பவன் -
ஓநாய்கள் நடுவிலே ஆட்டைப் போல் நம்மையே
ஆண்டவர் இயேசு அனுப்பிவைத்தார் அவர் பணியை செய்யவே - 2
அவமானம் சூழலாம் - இதில் மரணம்கூட நேரலாம்
இவையாவும் நாம் சகித்தால் ஜீவ கிரீடம் சூடலாம் -
நோய்களையும் நீக்கலாம் பேய்களையும் ஓட்டலாம்
ஆவியில் நிறைந்து தீர்க்கதரிசனமும் சொல்லலாம்
ஒன்பது வரங்கள் இருக்கலாம் பெரும் மலையைக்கூட பெயர்க்கலாம்
உண்மை அன்பு இல்லையென்றால் ஊழியம் செய்வதை நிறுத்தலாம்
உண்மை அன்பு இருந்துவிட்டால் உலகத்தையே கலக்கலாம் - ஏலேலோ