துதிப் பாடல்கள்

இயேசுவோடு இணைந்து

Yesuvodu Inaindhu

இயேசுவோடு இணைந்து ஜீவிக்கிறேன் நான்

என் வாழ்வில் ஒன்றும் குறைவில்லையே

சிங்ககுட்டிகளும் தாழ்ச்சியாய் கிடக்கும்

ஆனாலும் எனக்கு குறைவில்லையே..

நடனம் போடுவேன் இயேசுவை பாடுவேன்

ஆவியில் ஆடுவேன் எக்காளம் ஊதுவேன் (2)

1. பாதையில் பதறி போனாலும்

என்னை தேற்றும் (2)

வழியில் விலகி போனாலும் என்னை தேற்றும் (2)

எண் பாதையெல்லாம்

நெய்யாய் பொழிகிறது

என் வழியில் வெளிச்சம் உதிக்கிறது (2)

2. மலைகள் விலகி போனாலும்

என்னை தேற்றும் (2)

பர்வதங்கள் பெயர்ந்து போனாலும்

என்னை தேற்றும் (2)

உம் கிருபையென்னை

என்றும் தாங்கிடுதே

ஆனாலும் எனக்கு குறைவில்லையே..

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு