இயேசுவின் பின் நடப்பேன் நான் நடந்தே செல்லுவேன்
ஒவ்வொரு நாளும் ஜெபித்திடுவேன்
ஒவ்வொரு நிமிடமும் துதித்திடுவேன்
அவர் பாதம் போதும் அவர் அன்பிற்க்கீடாய்
என்னிடம் ஒன்றுமேயில்லை - 2
என்ன நடந்தாலும் இயேசுவின் பின்
நிச்சயம் நடப்பேன் சாட்சியாய் - 2
நான் ஒன்று செய்வேன் -பின்னானவை மறந்து
முன்னானவை நாடி தேடி- 2
ஆராதனை இயேசுவிற்க்கே
அபிஷேகம் என் வாழ்நாளெல்லாம் - 2
இயேசுவை மட்டுமே - வணங்குவேன் (போற்றுவேன்) - 2
மரணம் தோல்வி எதுவானாலும்
சத்தியமாய் நான் சாதிப்பேன் – 2
இப்போதே எழும்பி -ஒவ்வொரு நாளும் - 2
சிலுவையை அனுதினம் சுமந்திடுவேன் - 2
பசி பட்டினி பஞ்சங்களில் கூட
ஊழியம் சிறப்பாய் செய்யுவேன் - 2
கர்த்தரைத் துதித்து கர்த்தரை பாடி கீர்த்தனம் பண்ணுவேன் - 2
அதிசயங்கள் எல்லாம் தியானிப்பேன் – 2