இயேசுவின் ஊழியனே இயேசுவின் ஊழியனே-2
ஊழியப் பாதையில் உபத்திரவமா ஊழியப் பாதையில்
உபத்திரவமா இயேசுவின் ஊழியனே...ஒ... இயேசுவின் ஊழியனே
உறவுகளை மறந்து உறக்கத்தையும் இழந்து
ஊரு விட்டு ஊரு வந்து ஊழியம் செய்தாயே
பசியும் பட்டினியும் பழக்கமாய் போனதால்
பார்ப்பவருக்கு பாட்டும் பழமொழியானாயே-2
தங்க இடமில்லாமல் நீயும் தவித்தபொழுதும்கூட ஒ-2
தாகமாய் கர்த்தருக்கு ஊழியம் செய்தாயே-2
ஊழியம் ஒரு பக்கம் குடும்பம் மறுபக்கம்
சுமை தாங்க முடியாமல் சோர்ந்து நீ போனாயே
திரும்ப போய்விடலாம் என்று நீயும் நினைத்தாயே
திரும்பாமல் திரும்பவும் ஊழியத்தை தொடர்ந்தாயே-2
எல்லாரும் துடைத்துப் போடும் அழுக்கை போலாகியும் நீ -2
ஒ.ஆவலாய் கர்த்தருக்கு ஊழியம் செய்தாயே-2
உன்னத தேவனுக்கு ஊழியம் செய்ததினால்
பரலோக பிதாவும்உன்னை கண்டு மகிழ்ந்திடுவார்
கர்த்தருக்காய் பாடுகளை நீயும் சகித்ததினால்
அவரோடு கூட நீ ஆளுகை செய்திடுவாய்-2
உனக்கு உண்டான பலன் எல்லாம்
உன்னதத்தில் தானே உண்டு-2 ஒ
அழியும் ஆத்மாவை காப்பதே உன் தொண்டு-2