இயேசுவின் நாமமே இனிதான நாமமே
சுவைத்து பார்த்தால் போதுமே தேனினும் மதுரமே (2)
1.பாவியாய் இருந்த எனக்காய் பரம் விட்டு பாரில் வந்து
பரிசுத்த இரத்தம் சிந்தி எனை மீட்ட நாமமே (2)- இயேசுவின்
2.துரோகியாய் தூரம் போன என்னையும் சேர்த்துக் கொண்டு
நீதிமான் என்றழைத்து நிரந்த வாழ்வளித்த (2) - இயேசுவின்
3.அக்கிரம சிந்தை கொண்டு அன்பருக்கு அகன்று போனேன்
அகாபே அன்பினாலே அண்டி வந்த நாமமே (2)- இயேசுவின்
4.நீசனாய் நித்தம் வாழ்ந்து நேசரை விலகினேனே
நீதிபரராயிருந்து பரிந்து பேசும் நாமமே (2) - இயேசுவின்