இயேசுவே உன்னோடு நான் உறவாட
வாழ்கின்றேன் உன் மறைவளர்க்கவே
என் உடல் ஆவியை உரமாக்கிப் போடுவேன்
நிழலைப் போல நீயும் என் நினைவைத்
தொடர்ந்து வா - உந்தன் நினைவில் மூழ்கி
நானும் - எந்தன் நிலையை மறக்கவே
நிலத்தில் விளையும் மணிகள் எல்லாம்
களத்தில் சேருமோ - 2
எந்தன் மனதில் விளையும் நினைவு எல்லாம்
உன்னைச் சேருமே!
செடியில் மலரும் மலர்கள் எல்லாம்
மணத்தை வீசுமோ - 2
உந்தன் மடியில் மலர்ந்த நானும் புகழ்
மணத்தை வீசுவேன்!