இயேசுவே ராஜனே உந்தன் அன்பு ஒன்றே போதுமே
உமக்காக தான் வாழ்கிறேன் உமக்காகவே வாழ்கிறேன்
காலை தோறும் புதிய கிருபை தருகிறீர்
கண்ணின் மணி போல் என்னை காக்கின்றீர்
ராஜாதி ராஜா நீரே என்னை என்றும் ஆள்பவரே - 2
எதற்காக வந்தீர் என்றறிவேன்
உமைபோல எனை மாற்றிட
பேர் சொல்லி அழைத்தவரே - என்னில்
உயிரோடு இருப்பவரே - 2
சிலுவை என் மேன்மை என்றுணர்ந்தேன்
உன் சீஷனாக வாழ்கிறேன்
உயிர் கொடுத்து மீட்டவரே - இன்று
உம்மோடு தான் வாழ்கிறேன்