துதிப் பாடல்கள்

இயேசுவே போதுமானவர்

Yesuvae Podhumaanavar

இயேசுவே போதுமானவர்

இயேசுவே அருமையானவர்

இயேசுவே நம்பத்தக்கவர்

இயேசுவே உண்மையுள்ளவர் - 2

ஒருவரும் பார்க்க கூடாத ஒளியினில்

வாசம் செய்பவர்

ஒரு நாளும் என்னை மறவாமல்

நினைப்பவர் தேவன் ஒருவரே - 2

எப்பொழுதும் எந்நாளும்

உம்மையே நான் துதித்திடுவேன்

என்னுடைய பாவத்திற்காக

மரித்தவர் இயேசு ஒருவரே

என்னுடைய தேவைகளெல்லாம்

அறிந்தவர் இயேசு ஒருவரே - 2

தாய் என்னை மறந்துப்போனாலும்

அதற்கு மேலாய் அன்பு காட்டினீர்

தந்தை என்னை வெறித்திட்டாலும்

மறவாத கர்த்தர் ஒருவரே - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு