துதிப் பாடல்கள்

இயேசுவே எங்கள் தேவனே

Yesuvae Engal Devanae

இயேசுவே எங்கள் தேவனே உம் கிரியைகளை

அடியார் கண்டு களிகூரக் கிருபை செய்வீரே

உடனே கிரியைகளைச் செய்வீர் எங்கள் தேவாதி தேவனே

உடனே கிரியைகளைச் செய்வீர் எங்கள் இயேசு தேவனே

கிரியைகளை அடியார் காணக் கிருபை செய்வீரே

இயேசுவே உம் மா உன்னதக் கிரியைகளைக் கண்களால்

கண்டு களிகூர்ந்திடவே கிருபை செய்வீரே

இயேசுவே உம் மா பெரிய கிரியைகளைக் காதுகளால்

கேட்டு மகிழ்ந்திடவே நீர் கிருபை செய்வீரே

இயேசுவே உம் அதிசயக் கிரியைகளை நாவுகளால்

பேசி மகிழ்ந்தானந்திக்கக் கிருபை செய்வீரே

ஊமையரும் செவிடரும் குருடரும் சுகமடைவதைக்

கண்ணால் கண்டு களித்திடவே கிருபை செய்வீரே

ஊனரும் சப்பாணிகளும் குதித்து நடப்பதைக்

கண்ணால் கண்டு பிரமிக்கக் கிருபை செய்வீரே

மரித்தவர்கள் உயிரடைந்து எழுந்து நடப்பதைக்

கண்ணால் கண்டு அதிசயிக்கக் கிருபை செய்வீரே

குஷ்டரோகிகள் சுத்தமாகி மாம்சம் நிறம் மாறுவதைக்

கண்ணால் கண்டு பூரிக்கவே கிருபை செய்வீரே

உலகம் முழுதும் உம் கிரியைகள் நடப்பதைக் கண்டும்

கேட்டும் பிரமித்திடவே கிருபை செய்வீரே

உலகம் முழுதும் உம் சுவிசேஷம் பிரபலம் அடைவதை

அடியார் கண்டு ஆனந்திக்கக் கிருபை செய்வீரே

இரட்சிப்பின் கெம்பீர சத்தம் எங்கும் முழங்குவதை கண்டும்

கேட்டும் பூரிக்கவே கிருபை செய்வீரே உடனே

அடியார்களின் இருதயம் உம் மாபெரும் கிரியைகளால்

கொழுந்து விட்டு எரிந்திடவே கிருபை செய்வீரே

பரலோகத்தின் சந்தோஷத்தைப் பூலோகிலும் அடியார்

கண்டு ஆனந்திக்கவே நீர் கிருபை செய்வீரே உடனே

ஆச்சர்யத்தால் ஆர்ப்பரித்து ஆடிப்பாடிக் களித்து

ஆனந்தத்தால் குதித்திடவே கிருபை செய்வீரே

அற்புதங்கள் அடையாளங்கள் பயங்கரக் கிரியைகளை

அடியார் கண்டு பிரமிக்கவே கிருபை செய்வீரே உடனே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு