துதிப் பாடல்கள்

இயேசுவே எந்தன் இதயத்தின் ராஜா

Yesuvae Endhan Idhayathin Raajaa

இயேசுவே எந்தன் இதயத்தின் ராஜா

என்னை ஆளும் நல்லரசே - வல்லா

என்னை ஆளும் நல்லரசே - 2

உம்மைப்போல் ஒரு தேவனை

உலகினில் அறிதிடேன் - 2

உம்மையே தான் நான் நம்பினேன் - நாதா

உம்மையே தான் நான் நம்பினேன்

1. நம்பி வந்தோரை தள்ளிடேன் என்று

தம்பிரான் தஞ்சம் வந்தேன் - உந்தன்யிடம்

தம்பிரான் தஞ்சம் வந்தேன் - 2

வாக்குத்தத்தங்களை ஆக்கியோன் நீரே - 2

வாக்கு மாறாதவரே - என்றும் வாக்கு மாறாதவரே

2. பாதம் பணிந்தேன் மன்றாடி நின்றேன்

பாவம் அதை மன்னித்தீர் - எந்தன்

பாவம் அதை மன்னித்தீர் - 2

உன் ரத்தம் அல்லால் என்னை சுத்தம் செய்திடவே - 2

உலகினில் ஏதும் இல்லையே - எனக்கு

உலகில் ஏதும் இல்லையே

3. விடமாட்டேன் நாதா விடமாட்டேன் நாதா

விடமாட்டேன் நின்பாதம் என்றென்றும்

விடமாட்டேன் நின்பாதம் - 2

உம்மை விட்டால்யான் என்னை சேர்த்திட யார்தான் - 2

பாதம் அதை அன்டினேன் - உந்தன்

பாதம் அதை அன்டினேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு