துதிப் பாடல்கள்

இயேசுவே என் தேவனே என்றும்

Yesuvae En Devanae Endrum

1. இயேசுவே என் தேவனே என்றும் உம் பாதம் பணிவேன்

என்றென்றும் உம் பாதமதையே -2

2. நீண்ட இரும்பாணியால் உருவக் கடாவப்பட்ட -2

உம் திருப் பாதங்களையே -2

3. கடல் மேல் நடந்த உம் தங்கப் பாதங்களை -2

கனிவுடன் என்றும் பணிவேன் -2

4. மரியாள் தன் கண்ணீரால் மிக நனைத்துத் துடைத்துப் -2

பணிந்த பொற் பாதங்களையே -2

5. பாவிகள் ரோகிகட்காய்ச் சுற்றியே மிக நடந்த -2

சுத்தரின் பாதம் பணிவேன் -2

6. பாரச் சிலுவைதனைத் தூக்கியே நடந்த -2

நின் திருப் பாதங்களையே -2

7. உம் திருப் பாதங்களின் ஆணித் தழும்புகளால் -2

தயவாய் குணமாக்குகிறீரே 2

8. தூதர்களும் தொழும் தூயரின் பாதங்களை - 2

தூசியாம் யானும் பணிவேன் -2

9. கர்த்தரின் பாதங்களை யாவரும் பணிந்திடுவீர் -2

பரலோக பாக்கியம் பெறவே -2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு