இயேசுவே என் தேவனே - உம்மை நான்
என்றென்றும் ஸ்தோத்திரிப்பேன்
1. என் அருமை இயேசுவே அவனியில் உம்மை நான் -2
அனுதினமும் போற்றித் துதித்திடுவேன் - இயேசுவே
2. பரலோகில் வீற்றிருக்கும் பரிசுத்த தேவனே -2
பயத்துடன் பரிசுத்தமாய் பணிந்து தொழுதிடுவேன்
-- இயேசுவே
3. பாரக் குருசில் தொங்கி ஜீவன் விட்ட தேவனே -2
ஒரு போதும் உம்மை நான் மறக்க மாட்டேன் - இயேசுவே
4. உருக்கமும் இரக்கமும் நிறைந்த நல்ல தேவனே -2
முழங்கால்படியிட்டு குனிந்து பணிந்திடுவேன் - இயேசுவே
5. ஆவியாய் இருக்கிற என் பிதாவும் தேவனே -2
- ஆவியோடும் உண்மையோடும் பக்தியுடன் தொழுதிடுவேன் !
- இயேசுவே
6. மிகப் பெரியவர் எந்தன் இயேசு தேவனே -2
முகங்குப்புற விழுந்து பொற்பாதம் பணிந்திடுவேன்
- இயேசுவே
7, வானாதி வானங்களும் கொள்ளமாட்டா தேவனே -2
பயந்து நடுநடுங்கி சாஷ்டாங்கமாய் பணிவேன் - இயேசுவே
8. கருணையின் தேவனை கர்த்தாதி கர்த்தரை -2
கரங்கள் குவித்து சிரம் தாழ்த்தி தொழுதிடுவேன்
- இயேசுவே
9, ஸ்தோத்திரித்துத் துதித்துப் புகழ்ந்தும் போற்றிடுவேன் -2
என்றென்றும் பொற்பாதம் பணிந்து வணங்கிடுவேன் - இயேசுவே