இயேசு வரப்போகிறார்
அழைத்து செல்லப்போகிறார்
ஆயத்தமாகிவிடு ஆனந்தமாய்பாடு - 2
1. நீதியுள்ள தேவன் நியாயம் தீர்க்க - இந்த
பூமியின் மேல் வருகிறார் - என்றும் - 2
அன்று கண்டு புலம்பாமல் - நீ
இன்றே மனந்திரும்பு - 2
மனந்திரும்பு
மனந்திரும்பு - 2
மன்னவன் இயேசு
வருகின்றாரே
மகிமையின் ராஜன்
வருகின்றாரே - 2
2. சீக்கிரம் வருவேன்
என்றுரைத்த - தேவன்
சீக்கிரமாய் வருகின்றார் மிக - 2
அந்த நாள் பயங்கரமே
உனக்குள் ஏன் இன்னும் தாமதமே - 2
3. வருவேனென்று நமக்கு
வாக்குப்பண்ண - தேவன்
தாமதமேன் பண்ணுகிறார் சீக்கிரம்
எல்லோரும் மனந்திரும்ப - நம்
தேவன் விரும்புகிறார்
இதை நீ புரிந்து கொண்டு
என் ஜனமே மனந்திரும்பு