இயேசு உன்னை அழைத்தார்
இன்று உன்னைத்தான் அழைத்தார்
தேசம் அழியாது காத்திடவே
திறப்பில் நிற்க ஒடி நீ வா
1. அறுப்பு மிகுதி ஆட்கள் கொஞசம்
வயல் வெளிகளும் ஆயத்தம்
காலம் வீணாகும் முன் நீ வா
அழைப்பை ஏற்ற்ய் அடிபணிந்து
தலைவனுக்காய் உழைத்திடவே
வீரனாக ஆர்த்தெழுந்து வா - அறுப்பு
கண்ணீரோடு விதைத்திடுவோம்
கெம்பீரமாய் அறுத்திடுவோம்
ஏற்ற காலம் காத்திருக்க வா
கலக்கமென்ன தயக்கமென்ன
கலப்பை மேல் கைவைத்த பின்னே
திரும்பி நீயும் பார்ப்பதென்ன வா - கண்ணீரோடு
2. சமாதான நாட்களிலே
சாந்து நீயும் விழுந்து விட்டால்
யோர்தானை சந்திப்பதெப்படி வா
காலாட்களோடோட்டத்திலே
இணைந்து நீயும் தோற்றுவிட்டால்
குதிரையோடு ஓடுவதெப்படி வா - சமாதான
சீக்கிரத்தில் நீங்கிப்போகும்
இலேசான உபத்திரவம்
நித்திய கனமகிமை அளிக்கும் வா
வாழ்ந்திடுவோம் இயேசுவுக்காய்
உழைத்திடுவோம் இயேசுவுக்காய்
இரத்த சாட்சி தொகை முடிப்போம் வா - சீக்கிரத்தில்