இயேசு சுவாமி எங்கள் ஜெபம் கேளும்
எங்கள் சுவாமி எங்கள் முகம் பாரும்
சேரும் சிறியோர் தானை
தாரும் தேவாசீர்வாதம் தன்னை
அடிமை என்னை கண்ணோக்கும்
உம்மைதான் நோக்குகின்றேன்
கண்கலங்கும் ஏழைநான்
நொறுங்குண்ட மண்பாத்திரம் நானே
நெரிந்த நாணல் என்னை
முறியாமல் காப்பீரே
பணிந்து நொறுங்குண்ட
ஆவியை நீர் புறக்கணியீர்
உள்ளமதில் கதறல்
எல்லாம் உமக்குத் தெரியுமே