துதிப் பாடல்கள்

இயேசு ராஜா

Yesu Raajaa

இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன்

செய்த நன்மை நினைத்து

துதி சொல்லி பாடுகிறேன்

காலையும் மாலையும் எந்த வேளையிலும்

துதி பாடல் ஓய்வதில்லை

காலமே மாறினும் சூழ்நிலை மாறினும்

நாவில் துதி ஓய்வதில்லை

வானம் பூமி யாவும் ஆளுகின்றவரே

ராஜ்யம் எல்லையில்லையே - உம்

என்னை யாளும் ராஜாவே - உம்

அன்பினில் எல்லையில்லையே

வாக்கு மாறா தேவன் வாக்குத்ததம் தந்து

சொன்னதெல்லாம் செய்தீரே - நீர்

பொய்யுரையா என் தேவனே - நீர்

மனம் மாறுவதில்லையே

வாக்குகடங்காத பெருமுச்சோடு

வேண்டுதல் செய்கின்றீர்

எனக்காகவே செய்கின்றீர்

எனக்காக யாவையுமே - நீர்

செய்து முடிக்கின்றீர்

பாவங்களுக்கேற்ற தண்டனை தராமல்

மன்னிப்பையும் தந்தீரே - நீர்

இரக்கத்தில் ஐஸ்வர்யமே - உம்

இரக்கத்தில் முடிவில்லையே

பாதாளத்தில் நானும் போய் சேர்ந்திடாமல்

பாதுகாத்து கொண்டீரே - நீர்

என் நீதியால் இல்லையே - உம்

சுத்த கிருபையினாலே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு