துதிப் பாடல்கள்

இயேசு நீங்கயில்லாம

Yesu Neengayillaama

இயேசு நீங்கயில்லாம என்னால ஒன்றும்

கூடாது கூடாதப்பா

உந்தன் சமூகம் என்முன்னால்

போகாமல் போனால்

உம் சேவை செய்யேனப்பா

என்னோடேயிருந்து நடத்துங்கப்பா

எதிரியின் தடைகளை அகற்றுங்கப்பா

அதிசயமானவரே என்னோடு வாழ்பவரே

வல்லமை வரங்களைத் தாருங்கப்பா

அபிஷேக மழையை அனுப்புங்கப்பா

பரிசுத்த ஆவியே அருள்மாரி ஊற்றுமே

ஆதியும் அந்தமுமானவரே

அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே

என்றென்றும் மாறாதவர் என்னாலும் வாழ்பவரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு