துதிப் பாடல்கள்

இயேசு நாதா உம்மை அண்டி

Yesu Naadhaa Ummai Andi

இயேசு நாதா உம்மை அண்டிக் கொள்ளவே

உந்தன் அடிமை வந்தேனய்யா-2

இயேசு தேவா எந்தன் கரம் பிடித்திடவே-2

உந்தன் கரம் நீட்டீனீரய்யா-2

இயேசுவே உம் மார்பிலே ஆர்வமாய் சாய்ந்திடுவேன்-2

ஆசையாய் என்னையும் அனைத்துக்கொள்வீரே-2

அப்பா என்ற ழைத்திடும் அதிகாரம் தந்தீரே -2

உள்ளங்கையில் என்னையும் வரைந்து வைத்தீரே-2

இயேசுவே உம் கரத்திலே என்னையும் தந்திடுவேன்-2

கரம் பிடித்து என்னை நடத்திச் செல்வீரே-2

தடைகள் யாவையும் நீக்கி விடுவீரே-2

என்மேல் உம் கண்ணை வைத்து ஆலோசனை சொல்வீரே-2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு