துதிப் பாடல்கள்

இயேசு என்ற நாமத்திற்கு

Yesu Endra Naamathirku

இயேசு என்ற நாமத்திற்கு எத்தனை மகிமை

தேவன் சொன்ன வார்த்தையிலே எவ்வளவு கிருபை

இயேசு என்ற நாமத்திற்கு எத்தனை மகிமை, என்

தேவன் சொன்ன வார்த்தையிலே எவ்வளவு கிருபை... - 2

வானத்திலும் பூமியிலும் விளங்கிடும் நாமம்

வான சேனை தூதர்களும் வணங்கிடும் நாமம்... - 2

வானுலத்தோர் பூதலத்தோர் பூமியின் கீழோர்

யாவருடைய முழங்கால்களும் முடங்கிடும் நாமம்...-2

சிலுவையிலே தொங்கும்போதும் மன்னிப்புத்தந்தார்,

தன்னிடத்தில் வந்தவரே புறம்பே தள்ளார்... - 2

தாழ்மையுள்ள மனிதருக்கு கிருபை அளிப்பார்,

தாயைப்போல அன்பாய் நம்மை அனைத்துக்கொள்வார்...-2

இயேசு வந்த உள்ளங்களில் என்றும் சந்தோஷம்,

நேசர் தங்கும் இல்லங்களில் என்றும் சமாதானம்... - 2

அவரை ஏற்றுக்கொண்டவர்கள் இரட்சிப்புப் பெறுவார்

மீட்புக்கென்று ஆவியிலே முத்திரை பெறுவார்... -2

இயேசு சொன்ன வார்த்தைகள் எல்லாம் நிறைவேறுது

பின்மாரி மழையும் இன்று ஊற்றப்படுகுது... - 2

வருவேன் நான் என்று சொன்னவர், மீண்டும் வருவார்,

அவருடனே செல்ல நாமும் ஆயத்தப்படுவோம்... -2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு