யார் அந்த மகிமையின் ராஜா - 4
உண்டாக்கின ராஜா உருவாக்கின ராஜா
சுவாசம் தந்த ராஜா ஜீவன் தந்த ராஜா
1. பூமியின் மண்ணெடுத்து
மனிதனை உருப்படுத்தி
ஜீவ சுவாசத்தை ஊதி
ஜீவனை தந்தவர் - 2
2. உன்னத மானவரும்
உயர்ந்தென்றும் இருப்பவரும்
பூமியின் மீதெங்கும்
உண்மையாய் அரசாளும் - 2
3. பாவியாய் வாழ்பவரை
பேர் சொல்லி அழைத்து
பரிசுத்த படுத்தி
மார்போடு சேர்த்தனைக்கும் - 2
உண்டாக்கின ராஜா உருவாக்கின ராஜா
சுவாசம் தந்த ராஜா
ஜீவன் தந்த இயேசு ராஜா
நீர் அந்த மகிமையின் ராஜா
நீர்தான் என்றும் மகிமையின் ராஜா