துதிப் பாடல்கள்

விண்ணுக்கும் மண்ணுக்கும்

Vinnukkum Mannukkum

விண்ணுக்கும் மண்ணுக்கும்

நீர் தானே தெய்வம்

விண்ணோடும் மண்ணோடும்

உறவாடும் தெய்வம்

நீரே என் விண்ணகவித்து நான்

உந்தன் மண்ணகச்சொத்து

உம்மை நான் விட்டிடவே மாட்டேன்

உம்மோடே என்றும் வாழுவேன்

நான் உந்தன் அன்புக்கு என்றென்றும் அடிமை

நீர் எந்தன் நேசர் அல்லவா

நீர் எந்தன் மீட்பின் சின்னம்

நீர் எந்தன் அன்பின் சிகரம்

உம்மை நான் விடவே மாட்டேன்

உம்மோடே என்றும் வாழுவேன்

வாழ்வுக்கும் வசதிக்கும் நீர்தானே பொருத்தம்

வேறு ஏதும் வேண்டாம் வருத்தம்

நீர் எந்தன் ஜீவிய பந்தம்

நீர் எந்தன் மனசுக்கு விருப்பம்

உம்மை நான் விட்டிடவே மாட்டேன்

உம்மோடு என்றும் வாழுவேன்

உடலுக்கும் உயிருக்கும் நீர்தானே மருந்து

பிணியெல்லாம் ஓடும் பறந்து

உலகத்தை என்றும் மறந்து

தேவா உன் பக்கம் இருந்து

உம்மை நான் விட்டிடவே மாட்டேன்

உம்மோடு என்றும் வாழுவேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு