துதிப் பாடல்கள்

விதைப்பும் அறுப்பும் பூமியின்

Vidhaippum Aruppum Poomiyin

Tamil Christian song lyrics: விதைப்பும் அறுப்பும் பூமியின் (Vidhaippum Aruppum Poomiyin). பாடல் வரிகள். More songs: வ

1. விதைப்பும் அறுப்புமே பூமியின்

மீதினில் மாறி மாறி வருமே ஆ.. ஆ..

பகலும் இரவுமாய் வருடங்கள்

மாயமாய் நழுவியே சென்றிடுமே ஆ.. ஆ..

சிந்திப்பீர், சிந்திப்பீர் காலங்களைச் சிந்திப்பீர்

இயேசு கிறிஸ்துவின் வேலை ஒன்றே - இன்று பிரதானம்

2. ஒன்று இரண்டென எத்தனை வருடங்கள்

கனவென கழிந்தது பார்

எஞ்சிய நாட்களை வஞ்சிக்காது

தேவப் போரினில் ஈடுபடு - சிந்திப்பீர்

3. நாடுகள் நடுவினில் வாய்ப்புகள் உனக்காக

எத்தனை நாட்கள் உண்டு

சாதகமானதோர் வாசல் இங்கு கண்டு

வந்து பயன்படுத்து - சிந்திப்பீர்

4. ஆழக் கடல்களில் படகைச் செலுத்திட

கடல்போன்ற தேவையல்லோ

பாவக் கடலினில் மூழ்கிடும் யாவர்க்கும்

படகு உன் சாட்சியல்லோ? - சிந்திப்பீர்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு