வெற்றியுண்டு ஜெயமுண்டு
இயேசுவின் நாமத்திலே
யுத்தம் செய்ய புறப்படு
கர்த்தர் இயேசு முன் செல்லுவாரே - 2
1. சர்வாயுதம் தரிப்போமே
சாத்தானை எதிர்கொள்வோமே - 2
வசனம் என்னும் வாலை ஏந்துவோமே
வஞ்சகனை வீழ்த்திடுவோம் - 2
2. பெலன் தரும் கிறிஸ்துவினாலே
பெலன் கொண்டு எழும்பிடுவோமே - 2
பெலவனை வீழ்த்திடுவோமே
எளியோரை மீட்டுயிடுவோமே - 2
3. இதயம் நொறுங்கிட ஜெபிப்போம்
இயேசுவே கர்த்தர் என்று உரைப்போம் - 2
இந்தியா எங்கும் செல்வோம்
இயேசுவுக்காய் சுதந்தரிப்போம் - 2
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா -2