வெற்றி சிறந்தாரே யேசு
வெற்றி சிறந்தாரே -2
மரணத்தை வென்றாரே
பாதாளத்தை வென்றாரே -2
ராஜாதி ராஜாவாய்
என்றென்றும் ஆளுகை செய்கின்றார் – 2
ஓ ஹோ ஓ ஹோ
ஓஹோ ஹ ஹோ ஹோ.. - 4
நீதிமானின் கூடாரத்தில்
இரட்சிப்பின் கேம்பீர சத்தம்
கர்த்தரின் வலது கரம்
பராக்கிரமங்கள் செய்யும் - 2
மிகவும் உயர்ந்துள்ளது
பராக்கிரமம் செய்கின்றது -2
ஆகாதென்று தள்ளினார்கள் என்னை
ஆக்கினீர் மூலைக்கல்லாக
கர்த்தரின் செயல் இதுவே
கண்களுக்கு ஆச்சர்யமாக -2
களிகூர்ந்து மகிழ்ந்திடுவோம்
காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் -2