வெற்றி சிறந்தார் இயேசு வெற்றி சிறந்தார்
சிலுவையிலே மகிமையாய் வெற்றி சிறந்தார்
ஆடுவோம் பாடுவோம்
கொண்டாடுவோம்
சிலுவையின் வெற்றியை
சுதந்தரிப்போம் - 2
வெற்றி வெற்றி வெற்றி தோல்வி இல்லை வெற்றி - 2
1. சிலுவையிலே சாத்தானை ஜெயித்து விட்டார்
பாவத்தின்மேல் அதிகாரம் நமக்கு தந்தார் - 2
சிலுவையில் மரித்த தேவன்
உயிர்த்தெழுந்தார் - பாவத்தில்
மரித்த நமக்கு ஜீவன் தந்து
எழும்ப செய்தார் - 2
2. சிலுவையிலே இரத்தம் சிந்திவிட்டார் - அந்த
இரத்தத்தையே விலையாக (கிரயமாய்)
கொடுத்து விட்டார் - 2
சிலுவையினால் நம்மை தேவன்
மீட்டு கொண்டார் - சிந்திய
இரத்தத்தினால் நீதிமானாய்
ஆக்கி விட்டார் - 2
3. சிலுவையிலே நமக்காய் அடிக்கப்பட்டார் - அந்த
தழும்புகளால் நம்மை குணமாக்கி விட்டார் - 2
சிலுவையில் எல்லாம் செய்து
முடித்து விட்டார் - அந்த
சிலுவையத்தான் வெற்றி சின்னம்
ஆக்கி விட்டார் - 2