வருவாய் விரைவாய் இயேசு இரட்சகரண்டை
வருவாய் விரைவாய்
1. பரலோகம் விட்டுவந்த கோமான் - இந்தப்
பார்தனில் அவதரித்த பூமான் - உன்னை
பார்த்தழைக்கிறார் இன்று வாவா
2. பாவ சாபம் நீக்கி மீட்க - உனக்காய்
பாரக்குருசினில் மரித்தார் - இன்று
பாவ வழியை விட்டு வாவா
3. ரோகம் பிணிபோய் நீயும் வாழ - இன்று
துரோகம் மரணம் விட்டு நீங்க - நீயும்
தூய ஜீவியம் செய்ய வாவா
4. ஜீவனைப் பெற்று நீயும் வாழ இன்று
ஜீவனாம் கிறிஸ்துவண்டை வாவா -ஆத்ம
ஜீவனை அடைந்திட வாவா
5. நியாயாதிபதியாக வருவார் - இயேசு
நியாயம் தீர்த்திடுவார் நீ அறிவாய் - நித்திய
வருவாய் நரகத்தண்டனை விட்டு வாவா
6. மகிமைக்கென்று உன்னை அழைத்தார் -அவர்
மகிமையடைந்து நீயும் வாழ - அவர்
மகிமையைப் பெற்றிட வாவா